மக்களின் வழக்கறிஞர்

0
Screenshot_20260225-193026.jpg

மக்களின் வழக்கறிஞர்

கரை படாத உள்ளம் கொண்டு, நீதியின் குரலாய் வாதிடும் நீதிவாள்! பொய்கள் சூழ்ந்த போர்க்களத்தில், சத்தியத்தை மட்டும் கைப்பிடித்த போர்வீரன்! கண்ணுக்குத் தெரியாத அந்த கரம், நீதியின் தராசை காக்கும்!
அவர் கையில் கோர்த்த பேனா, நிரபராதியின் வாழ்வை மாற்றும்!
சில நேரங்களில் உண்மை மௌனமாக இருக்கலாம்! ஆனால் இவர் பேசும்போது அது உரக்க ஒலிக்கும்!
சில நேரங்களில் நியாயம் வளைந்து கொடுக்கலாம்! ஆனால் இவர் வாதங்களில் அது நிமிர்ந்து நிற்கும்! சட்டத்தின் ஒவ்வொரு நூலும், நியாயத்தின் ஒவ்வொரு சொல்லும், அவர் மூலையில் சுழன்று, சரியான வாதத்தினை உருவாக்கும்! நீதிமன்றத்தின் துணையாய், சட்டத்தின் காவலனாய், மக்களின் நம்பிக்கையாய், ஒவ்வொரு மக்களின் வழக்கறிஞரும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *